Sunday, February 1, 2009

"எம்மக்களை கொல்வது சீனாவின் டாங்கிகளோ,இந்தியாவின் உளவு விமானங்களோ மட்டுமல்ல வாய்மூடி கிடக்கும் சர்வதேச சமுகத்தின் "மௌனமும்" தான்.எங்கள் பழங்கதைகள் ஒன்றன்படி ஒவ்வுறு நாலும் ஏதேனும் ஒரு வீட்டில் இருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்..எங்கள் சகோதரிகளை குழந்தைகளை விட்டுவிட்டு சொல்லுங்கள் தாங்க முடியவில்லை...அவர்கள் எல்லாம் ஒருநாள் மனமார சிரிபதை பார்போம் என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் போராடுவதே"- இது உருகவைக்கும் தமிழ் சினிமாவின் கதை இல்லை-ஒரு இனம் பிறிதொரு இனத்தால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் அவலம் கண்டு பொங்கி எழுதியவனின் கடிதம்.தங்கள் தொப்புள்கொடி ஈழ சொந்தங்கள் அழிவதை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்து வரும் சொரணை அற்ற உறவுகளை உணர்சிபடுத்த உயிராயுதம் எடுத்த "முத்துக்குமார்"இன் இறுதி கடிதம். முழுதும் காண www.puthinam.com,www.nakkheeran.in பாருங்கள். சூடும்,சொரணையும் நமக்கு உண்டென்றால்,மன உணர்ச்சி இருந்தால் அவர் எண்ணங்களை நிறைவேற்ற அணிதிரள்வோம்.எரிந்துபோன அவரின் சாம்பலை பூசிக்கொண்டு புறப்படுவோம்-புதிய தமிழினம் படைக்க!ஈழம் காக்கும் தமிழினம் படைக்க!!
26-1-09 இந்திய குடியரசு தினத்தை ஒட்டி நாடே கொண்டாடிக்கொண்டு இருந்த அதே வேளையில் தென்கோடியில் வையம் ஆண்ட ஒரு இனம் வாழ்கை இழந்தும்,பாராண்ட இனம் பதுங்கு குழியில் பதுங்கியும்,உயிரை காக்க போராடிக்கொண்டு இருந்தது.இங்கே தேசிய கொடி ஏற்றப்பட்டு கொண்டு இருக்க அங்கே தமிழச்சிகளின் மானம் காக்கும் மார்பு கச்சைகளை கழட்டி வீசிக்கொண்டு இருந்தன சிங்கள ராணுவம். இங்கே அணிவகுப்பில் ராணுவ பீரங்கிகள் முழங்கிய அதே சமயம் இந்திய அரசு தந்த பீரங்க்கிகள்,ஏவுகணைகள் அங்கே தமிழர்கள் கொத்து கொத்தாக கொள்ளபட்டுகொண்டு இருந்தனர்.சில மணி நேரங்களில் 300 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர்.( உண்மையில் உயிரழப்பு ஆயிரத்தை தாண்டும்) ஆம்! இவைகள் நடந்தது ஏதேன் தோட்டம் இருந்ததாக குரான்,பைபிள் கூறிய, 5000 ஆண்டுகளுக்கு முன் வெள்ளத்தில் அடித்து கொண்டு செல்லப்பட்ட இறைதூதர் நோவாவின் கப்பல் தற்போது கண்டு எடுகபட்டதாக கூறப்படும் தமிழ் ஈழத்தில் தான்.முல்லைத்தீவு பகுதியில் பாதுக்காப்பு இடம் என்று சொல்லப்பட்ட இடத்திலே திட்டமிட்டு இலங்கை ராணுவம் குண்டுகளை போட்டதாக ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்தது. அய்ந்து லட்சம் தமிழர்கள் அங்கு அல்லல்பட்டுவருகின்றனர்..

உணவு இல்லாமல்,படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற மருத்துவ வசதியில்லாமல் உடைந்துபோன கைகளை சுமந்தபடியும்,சிதைந்த சதைகளை திரட்டியபடியும் திக்குதெரியாமல் ஓடிக்கொண்டு இருகின்றனர்.பாலுக்கு ஏங்கும் பிள்ளைகளுக்கு பாலூட்ட வழியில்லாமல் தவித்து கொண்டு இருக்கின்றனர் சிங்கள ராணுவத்தால் முலைகள் அறுக்கப்பட்ட தமிழச்சிகள்.யார் இவர்கள்?ஈழத்திற்க்கும் இவர்களுக்கும் என்ன சம்மந்தம்?சில புல்லுரிவிகள் பரப்பிவிட்ட கருத்துக்கள் போல் ஈழ தமிழர்கள் பிழைக்க போன இடத்தில நாடு கேட்பவர்களா?இந்த கேள்விகளுக்கான வரலாற்று விடையை சற்று பார்போம்:பழங்காலத்தில் குமரிகண்டம் என்று இலங்கையும்,இந்தியாவும் ஒன்றாக இருந்தது.பின் கடல்கொந்தளிப்பால் பிரிந்து தனிதனி நாடுகளானது.அப்பொழுது இலங்கையை "நாகர்கள்" எனபடுவோர் வாழ்ந்து வந்தனர்.நாக வழிபாடு நடத்துவதால் நாகர்கள்.தொன்மையான பழங்குடிகள் நாகத்தை வணங்குபவர்கள்.இன்றும் தமிழர்களின் வழிபாட்டில் இவ்வழிபாடு உண்டு.தமிழகத்தில் நாகர்கோயில்,நாகபட்டினம் என ஊர் பெயர்கள் இதற்க்கு உதாரணம்.எனவே நாகர்கள் எனும் தமிழர்கள் அங்கு புர்வகுடிகளாக வாழ்ந்துவந்தனர். தென் பகுதி இலங்கையில் இயக்கர்கள் எனும் பழங்குடிகள் வாழ்ந்தனர்.,

அதே சமயம் 2500 ஆண்டுகளுக்கு முன் பாடலிபுத்திரத்தில் (இன்றைய பாட்னா)விஜயன் என்ற இளவரசன் அவன் தந்தையோடு கோவித்துக்கொண்டு இலங்கை தெற்கு பகுதியில் போய் தன் படைவீரர்களோடு கரை இறங்கினான்.இயக்கர்களோடு கலந்த உறவில் ஆரியமும்,இயக்கரும் கலந்த ஒரு கலபினமாக "சிங்களம்" இனம் உருவானது.சிங்களம் என்ற பெயர் கூட விஜயனின் கொடி சிங்க கொடி அதில் இருந்து மருவி சிங்களமாக உருபெருகிறது.(இன்றும் அவர்கள் தேசிய கொடி சிங்க கொடியே.)இந்த வரலாற்றை கூறுவது கூட "சிங்கள பௌத்த அய்தீக நூலான" "மகா வம்சமே" ஆகும். ஆகா அங்கு பூர்வகுடிகளாக வாழ்ந்து வந்தவர்கள் தமிழர்களே.17 ஆம் நூற்றாண்டில் அங்கு ஆண்டு வந்த தமிழ் மன்னன் எல்லாளனை போர்ச்சுகல் அரசு கைது செய்து ஈழத்தை சிறைபிடித்தது.அதன்பின் ஆங்கிலேய அரசு 1795 இல் திரிகொனமலையையும்,1815 இல் கண்டியையும் என ஒட்டுமொத்த இலங்கையையும் பிடித்தது.இவ்வாறு தமிழர்கள் வாழும் வடக்கும் ,சிங்களர்கள் வாழும் தெற்கு பகுதியும் ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்டு ஸ்ரீலங்கா என ஒன்றாக உருமாறியது.நாளடைவில் உலகம் முழுக்க ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு விழுந்த அடியால் 1948 பிப் 4 அன்று இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு சென்றது பிரிட்டிஷ்!

அங்கு தான் பிரச்சினையின் தொடக்கம் அங்கு இருந்து தான் தொடங்கியது.சிங்களர்கள் கையில் சுதந்திரம் தரப்பட அவர்கள் 1949 இல் தமிழர்கள் குடிபகுதியில் வலுகட்டாயமாக சிங்களர்கள் குடியமர்த்தப்பட்டனர்.சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என சட்டம் இயற்றியது. இந்தியாவில் இருந்து ஆங்கில அரசால் தனியாக தேயிலை தொட்ட வேலைக்காக கொண்டு செல்லப்பட்ட மலையக தமிழர்கள் ஒன்னரை லட்சம் பேரின் குடியிரிமை பிரித்த சிங்கள அரசு அவர்களை அநாதையாக்கியது.1970 இல் அதிக மதிப்பெண் பெற்றால் தான் தமிழர்களுக்கு கல்வி,வேளையில் வாய்ப்பு என்று சட்டம் போட்டு கல்வி,வேலைவாய்ப்பு உரிமையை தட்டி பறித்தது.இதை ஜனநாயக முறையில் எதிர்த்தவர்களை கொடூரமாக கொன்று குவித்தது சிங்கள அரசு.துப்பாக்கி சூடு நடத்தியது.1981 மே 31 இல் ராணுவமும்,சிங்கள இனவெறியர்களும் மிகப்பெரிய இனபடுகொலைகளை தமிழர்கள் மீது ஏவினர்.தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்,தமிழ் ஆண்கள் ஆணுறுப்புகள் அறுக்கப்பட்டன.ஜனநாயக முறையில் போராடி சிறை சென்ற தமிழர்கள் 1983 ஜூலை 26 இல் வெலிகடை சிறையில் மனிதம் மறந்த வெறியர்களால் கொடூரமாக கொல்லப்பட்டனர். இங்கு தமிழன் கறி கிடைக்கும் என்று கசாப்பு கடைகளில் மிருகதனதொடு விற்றனர். ...

ஒரு இனத்தை அழிக்க அதன் பண்பாட்டு அடையாளங்கள்,பதிவுகளை அழிக்கணும் எனும் பாசிச கொள்கையோடு உலக புகழ் பெற்ற யாழ் நூலகம் சிங்கள அரசால் கொளுத்தப்பட்டது. இப்படி அணைத்து வகையான ஜனநாயக போராட்டங்களை கொடூரமாக நசுக்கி, நியாயமான வாழ்வுரிமைகள் மறுக்கப்பட்டு மிருகத்தனமாக கொல்லப்பட தவிர்க்க முடியாமல் நம் தொப்புள் கொடி உறவுகள் வேறுவகையான போராட்டத்தை கையில் எடுக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகினர்,ஆளாக்கப்பட்டனர்.கண்ணை குத்தவரும் விரலிடம் இருந்து அதை காக்க மூடும் இமைகளின் செயல் வன்முறை ஆகுமா? தன் குட்டியை கொள்ள வரும் "சிங்கத்திடம்" இருந்து அதை காக்க தன் கொம்புகளையே ஆயுதமாக்கி போரிடும் தாய் மானின் போராட்டம் வன்முறை ஆகுமா?இப்படி 1948 இல் தொடங்கிய இனவிடுதலை போராட்டம் இன்று வரை தொடர்ந்து வருகிறது. அன்றிலிருந்து இதை ஒடுக்கி வரும் சிங்கள அரசு இன்று முன்பைவிட மிருகவெறியோடு சீனா,பாகிஸ்தான்,ஜப்பான் போன்ற ஏழு நாடுகள் உதவியோடு தமிழர்களை கொன்று வருகிறது.கொஞ்சம் கொஞ்சமாக அழித்து இன்று முல்லைதீவினில் அகிலம் ஆண்ட இனத்தை சுருக்கிவிட்டது. ...

நம் வரிப்பணத்தால் வாங்கப்பட்ட ஆயுதங்கள் மூலம் நம் தொப்புள் கொடி உறவுகளையே அறுக்க,அழிக்க ஆயுத உதவி செய்து வருகிறது உலகில் மிக பெரிய "ஜனநாயக" நாடான நம் இந்தியா!.உலகிற்கு நாகரிகம் கற்று தந்த தமிழினம் இன்று தன் வேர்களை இழந்து சிதைந்து உள்ளது.யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகு நேசித்த இனம் இன்று நாடோடிகளாய்,ஏதிலிகளாய்(அகதி) அலைந்துகொண்டு இருக்கிறது.இன்னும் ஒரு நாளோ இரண்டு நாளோ ஈழத்தில் தமிழன் இருந்த சுவடே இல்லாமல் அழித்துவிடுவான் சிங்கள அரசு. அதன் பின் புதைக்கப்பட்ட அவன் எலும்புகள் கூட நமை மன்னிக்காது. தாய் தமிழர்களே நாம் என்ன செய்ய? அரசியல் பேடிகள் நாற்காலி கனவோடு தமிழன் சதைகளை சிங்களவனோடு சேர்ந்து ருசித்து கொண்டு இருக்க நாம் என்ன செய்ய? ஈழ தமிழன் மீது சிங்கள அரசு ஏவிவிடும் ஒவ்வுறு நாளின் போரிலும் ஓராயிரம் தமிழர்கள் அழிக்கப்பட்டு வர தாய் தமிழர்களே நாம் என்ன செய்ய? ....

நம் இடத்தை அபகரிக்கும்,நிலபரப்பை சிறைபிடிக்கும்,நம் இனத்தை அழிக்கும் பாசிச அரசுக்கு எதிராக போராடி வீரமரணம் அடைந்து வரும் ஈழ தமிழனிற்காக தமிழன் என்ற அடிப்படையில் கூட வேண்டாம் "மனிதன்" என்ற அடிப்படையில் குரல் கொடுக்கலாமே! இல்லையேல் நாளைய வரலாறு நமை மன்னிக்காது!!!அன்பு தோழிகளே,தோழர்களே சிந்திப்போம்! ..........